டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு லண்டனில் ஆதரவு

 

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு லண்டனில் ஆதரவு

இந்திய மத்திய அரசு மூன்று வேளான் சட்டங்களை இயற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்கட்சிகளிட கடும் எதிர்ப்பு வந்தது. அதை எப்படியோ பேசி சமாளித்துவிட்டது மத்தியில் ஆளும் மோடி அரசு.

ஆனா, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரகணக்கில் டிராக்டர் எடுத்துக்கொண்டு டெல்லியை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு லண்டனில் ஆதரவு

லட்சக்கணக்கான விவசாயிகள் கடும்குளிரையும் பொருட்படுத்ததாது டெல்லியில் 10 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றன. இதுவரை அரசுத் தரப்பில் 5 முறைகள் பேச்சு வார்த்தை நடத்தி விட்டது. ஆனால் எதுவும் வெற்றி பெற வில்லை. அதனால், அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு இரு தரப்பும் தயாராகி வருகின்றன.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக மாவட்டத் தலைநகரங்களில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தியது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு லண்டனில் ஆதரவு

இந்நிலையில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்தின் நியாயம் உணர்ந்த, லண்டனில் உள்ள இந்தியர்கள் நேற்று ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.

விவசாயிகள் இல்லையெனில் உணவு இல்லை என்ற பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். திடீரென்று அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதால், லண்டன் அரசு சிலரைக் கைது செய்தது.

உலகம் முழுவதும் இந்தப் போராட்டம் விரிவடைய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.