பிரம்மாண்ட டிராக்டர் பேரணி: டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகள்!

 

பிரம்மாண்ட டிராக்டர் பேரணி: டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லியில் பிரம்மாண்ட பேரணியை நடத்த உள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து கடந்த நவ.26ம் தேதியில் இருந்து டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது. போராட்டத்தால் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டும், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்த விவசாயிகள், மத்திய அரசை கண்டித்து குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

பிரம்மாண்ட டிராக்டர் பேரணி: டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகள்!

குடியரசு தின நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பேரணியை நடத்துமாறு டெல்லி காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது. அதோடு, மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. அதன் படி, டெல்லியின் சிங்கு எல்லையில் காவல்துறையின் தடுப்புகளை தகர்த்திவிட்டு விவசாயிகள் முன்னேறிச் செல்கின்றனர். இந்த பேரணியில் விவசாயம் தொடர்பான அணிவிப்புகள் இடம்பெறவிருப்பதாக தெரிகிறது. மேலும், அனைத்து டிராக்டர்களிலும் தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட டிராக்டர் பேரணி: டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகள்!

டெல்லியின் 5 எல்லைகளில் இருந்து தொடங்கவிருக்கும் இந்த டிராக்டர் பேரணி, குடியரசு தின அணிவகுப்பு முடிந்த உடன் தொடங்கும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு டிராக்டர்களிலும் 5 பேர் வீதம் தேசியக் கொடியுடன் டெல்லியில் இன்று மாபெரும் பேரணி நடக்கவிருக்கிறது. பேரணி தொடங்குவதற்கு முன்னரே தற்போது அங்கு பதற்றம் நீடிக்கும் சூழலில், விவசாயிகள் தலைநகர் டெல்லியையே இன்று அதிர வைக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.