டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் : பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு!

 

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் : பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு!

வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக கிசான் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் வி.எம்.சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் : பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு!

கடந்த ஆண்டு நவ.26ம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். டெல்லியின் புராரி மைதானத்தில் மையம் கொண்ட அவர்கள், விவசாயிகளுக்கு ஊறு விளைவிக்கும் அந்த சட்டங்களை நீக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல நாட்கள் இந்த போராட்டம் நீடித்து, மத்திய அரசு கண்டு கொள்வதாக இல்லை. விவசாயிகளின் கண் துடைப்புக்காக நடத்தப்பட்ட 11 கட்ட பேச்சுவார்த்தையும், தோல்வியிலேயே முடிந்தது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் : பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு!

அந்த சட்டங்களுக்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய விவசாயிகள், குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன் படியே, நேற்று டெல்லியில் 3 லட்சம் டிராக்டர்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேரணி தொடங்கியது. ஆனால், ஒரு சில மணி நேரங்களிலேயே காவல்துறைக்கும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு டெல்லி கலவர பூமியானது. பல நாட்கள் போராட்டம், ஒரே நாளில் திசை மாறிப்போனது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் கிடையாது என்றும் அவர்கள் கலிஸ்தான் இயக்கத்தினர் என்றும் விவசாயிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் : பாரதிய கிசான் சங்கம் அறிவிப்பு!

இந்த நிலையில், டெல்லியில் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் வி.எம்.சிங் அறிவித்துள்ளார். வேறு யாரோ வழிநடத்துதலுடன் ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க முடியாது என்பதால் போராட்டத்தில் இருந்து இப்போதே விவசாய அமைப்புகள் விலகிக் கொள்கின்றன என்றும் வேறு விதத்தில் எதிர்ப்புகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களை தியாகம் செய்யவோ அல்லது அடிக்கவோ நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.