டெல்லி விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

டெல்லி விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 21ஆவது நாளாக போராட்டம் தொடருகிறது. போரட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தயார் என மத்திய அரசு தெரிவித்தும், அச்சட்டங்களை ரத்து செய்தாக வேண்டும் என விடாப்பிடியாக விவசாயிகள் போராட்டத்தை தொடருகின்றன.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

இந்த நிலையில், டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லிக்கு விவசாயிகள் நுழைவது தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வியை முன் வைத்தனர். இதையடுத்து, கடுமையான குளிரிலும் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மனுக்கள் மீது நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி, ஹரியானா அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.