உச்சநீதிமன்றம் அமைத்த குழு மீது நம்பிக்கையில்லை; போராட்டம் தொடரும்- விவசாயிகள்

 

உச்சநீதிமன்றம் அமைத்த குழு மீது நம்பிக்கையில்லை; போராட்டம் தொடரும்- விவசாயிகள்

விவசாயிகளின் நலுனுக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்று கூறிய எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தன. இதனை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டம் நடந்தப்பட்டும், மத்திய அரசு இதனை திரும்பப்பெறுவதாக இல்லை. இந்த சூழலில் தான், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அதிரடியாக களமிறங்கினர். டெல்லி எல்லைகளில் முகாமிட்ட வட மாநில விவசாயிகள், தொடர்ந்து 48 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.

உச்சநீதிமன்றம் அமைத்த குழு மீது நம்பிக்கையில்லை; போராட்டம் தொடரும்- விவசாயிகள்

இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும் அறிவித்தனர். மேலும், விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க ஹெச்.எஸ்.மான், பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலாட்டி, அனில் தன்வந்த் ஆகிய 4 பேர் கொண்ட குழு அமைத்து நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்த பின், 32 விவசாய சங்கங்கள் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. வேளாண் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு, போராட்டத்தை முன் கூட்டியே முடிக்கும் திட்டம் இல்லை என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன.