விவசாயிகள் போராட்டம்: வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த விளையாட்டு வீரர்கள்!

 

விவசாயிகள் போராட்டம்: வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த விளையாட்டு வீரர்கள்!

டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க தடுப்புகள், முள் வேலிகள், முள் பலகைகள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீஸ் ஏற்பாடு செய்துள்ளது. இணைய சேவையையும் துண்டித்துள்ளது. இத்தகைய அராஜக நடவடிக்கைகளை செய்துவரும் பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஹாலிவுட் வரை எதிரொலித்துள்ளது இந்த பிரச்னை. பிரபல பாப் பாடகி ரிஹானா, விவசாயிகளின் பிரச்சினையை உலகம் ஏன் பேச மறுக்கிறது என்று ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு பின் விவசாயிகளின் போராட்டமும், டெல்லி போலீஸின் அடக்குமுறையும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ரிஹானைவை தொடர்ந்து சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர்.

விவசாயிகள் போராட்டம்: வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த விளையாட்டு வீரர்கள்!

சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, “ஒரு நாடாக நமக்கு இன்றைக்கு தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கின்றன. நாளையும் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கும். எல்லாவற்றையும் இணக்கமான மற்றும் பாரபட்சமற்ற பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும்” என ட்விட்டர் வாயிலாக கூறியுள்ளார்.

இதேபோல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், “இந்தியாவின் இறையான்மையை சமரசப்படுத்திக்கொள்ள முடியாது; வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாகவே இருக்கலாம், பங்கேற்பாளராக முடியாது, இந்தியர்களுக்கு இந்தியாவைப்பற்றி தெரியும், அவர்களை இந்தியாவிற்காக தீர்மானிப்பார்கள். நாம் ஒரு நாடாக இணைந்திருப்போம்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

D