புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 10 விமான டிக்கெட்டுகள் வாங்கிய டெல்லி விவசாயி

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 10 விமான டிக்கெட்டுகள் வாங்கிய டெல்லி விவசாயி

டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக டெல்லி விவசாயி ஒருவர் 10 விமான டிக்கெட்டுகள் வாங்கி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் வசித்து வரும் பாப்பன் கெஹ்லாட் என்ற விவசாயி தனது சொந்த செலவில் 10 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து அவர்களை அவர்களின் சொந்த மாநிலமான பீகாருக்கு வழியனுப்பி வைத்தார். அந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பாப்பன் கெஹ்லாட் விவசாய நிலத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“முதலில் அவர்களை ரயிலில் தான் அனுப்புவதாக இருந்தது. அதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சித்தோம். ஆனால் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. இவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் பணியாற்றி வருகிறார்கள். அதனால் அவர்களின் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தோம். எனவே அவர்களை மருத்துவ ரீதியாக பரிசோதித்து அவர்களுக்கான விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தோம்”என்று பப்புவின் சகோதரர் நிரஞ்சன் கெஹ்லோட் கூறினார்.

அந்த தொழிலாளர்களில் ஒருவர், “நான் விமானத்தில் பயணிப்பேன் என்று ஒருநாளும் நினைத்ததில்லை. எங்கள் முதலாளி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்” என்று பெருமையாக கூறினார்.