• March
    28
    Saturday

Main Area

Main



டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப். 8 ஆம் தேதி தேர்தல்! 

 சட்டப்பேரவை தேர்தல்
சட்டப்பேரவை தேர்தல்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில்  76.19 %  வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2, 3 ஆம் தேதி நடைபெற்று தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. மேலும் வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

sunil arora  

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும். மேலும் வேட்பாளர்கள் ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், வேட்பு மனு 22 ஆம் தேதி ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் வேட்புமனு திரும்பப்பெறுவதற்கான கடைசி தேதி ஜனவரி 24 ஆம் தேதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

டெல்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. 

2018 TopTamilNews. All rights reserved.