டெல்லியில் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை- துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

 

டெல்லியில் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை- துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை- துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

இந்நிலையில் டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் தலைநகர் டெல்லி இரண்டாம் இடத்தில் இருப்பதால் பள்ளிகள் திறப்புக்குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பாடத்திட்டத்தை 50 சதவீதம் வரை குறைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் உதவியுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பாட திட்டங்கள் வடிவமைக்கப்படும் என்றும், ஆகஸ்ட் மாதத்திற்கு பின் ஒரு வகுப்பில் 12-15 மாணவர்களின் பலத்துடன் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முதன்மை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.