நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு.. நடிகர் சுஷாந்த் வழக்கு குறித்து மனிஷ் சிசோடியா கிண்டல்

நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு.. நடிகர் சுஷாந்த் வழக்கு குறித்து மனிஷ் சிசோடியா கிண்டல்

நடிகர் சுஷாந்த் மரண வழக்குக்கு மத்திய அரசும், ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதை, நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு மற்ற எல்லாம் தீர்க்கப்பட்டு விட்டது என ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா கிண்டல் அடித்தார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய திரைப்பட உலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் நடிகர் மற்றும் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் உள்ளதால் அது தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு.. நடிகர் சுஷாந்த் வழக்கு குறித்து மனிஷ் சிசோடியா கிண்டல்
மனிஷ் சிசோடியா

நடிகர் சுஷாந்த் வழக்குக்கு மத்திய அரசும், ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுப்பதை ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், நமது நிலத்திலிருந்து சீனா வெளியேறி விட்டது, பல கோடி வேலைவாய்ப்புகள் வந்து விட்டது, பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலரை எட்டி விட்டது, விவசாயிகள், வர்த்தகர்கள் அனைவரும் லாபம் ஈட்டியுள்ளனர்.

நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு.. நடிகர் சுஷாந்த் வழக்கு குறித்து மனிஷ் சிசோடியா கிண்டல்
நடிகை ரியா

தூய்மை இந்தியா, டிஜிட்டல்-திறன் இந்தியா ஆகியவை வெற்றிடைந்துள்ளன. நாட்டில் ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது. ரியாவின் மொத்த குடும்பமும் கைது செய்யப்படவில்லை. மத்திய அரசும்-ஊடகங்களும் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றன. என பதிவு செய்து இருந்தார்.