டெல்லியில் ஒரே நாளில் 1,142 பேருக்கு கொரோனா!

 

டெல்லியில் ஒரே நாளில் 1,142 பேருக்கு கொரோனா!

டெல்லியில் இன்று மட்டும் புதிதாக 1,142 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 2,137 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 1,13,068 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் புதிதாக 1,142 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,29,531 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் ஒரே நாளில் 1,142 பேருக்கு கொரோனா!

கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,806 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12,657 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 7,339 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,509 பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. தலைநகர் டெல்லியில் இதுவரை மொத்தம் 9,29,244 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.