தெலுங்கானாவிற்கு டெல்லி அரசு ரூ.15 கோடி நிதியுதவி!

 

தெலுங்கானாவிற்கு டெல்லி அரசு ரூ.15 கோடி நிதியுதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தெலுங்கானாவிற்கு டெல்லி அரசு ரூ.15 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க, மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானாவிற்கு டெல்லி அரசு ரூ.15 கோடி நிதியுதவி!

மக்களை மீட்கும் சவாலான பணியை எதிர்கொண்டு வரும் தெலுங்கானா அரசு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அறிவித்திருக்கிறது. இதனிடையே தெலுங்கானாவிற்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.10 கோடி நிதியுதவி அளித்தார். மேலும், நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த முதல்வர் தெலுங்கானாவுக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாகவும் உறுதியளித்தார்.

தெலுங்கானாவிற்கு டெல்லி அரசு ரூ.15 கோடி நிதியுதவி!

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானாவுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ரூ.15 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.