டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கெஜ்ரிவால் தன்னைத் தானே சுயமாக தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நாளை கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீரிழிவு நோய் உள்ளது. கொரோனா வைரஸ் நோயை பரிசோதிப்பதற்கு அவரை ஒருநாள் காத்திருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை

டெல்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து காணப்படும் சூழலில், அம்மாநில முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதால் நாடு முழுக்க இந்த விஷயம் கவனம் ஈர்த்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 28,936 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 10,999 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 17,125 பேர் கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். டெல்லியில் கொரோனாவால் 812 பேர் இறந்துள்ளனர்.