வேளாண் சட்டங்கள் குறித்து திறந்த வெளியில் மத்திய அரசு விவாதித்த தயாரா? அரவிந்த் கெஜ்ரிவால்

 

வேளாண் சட்டங்கள் குறித்து திறந்த வெளியில் மத்திய அரசு விவாதித்த தயாரா? அரவிந்த் கெஜ்ரிவால்

வேளாண் சட்டங்கள் குறித்து அதிகமாக தெரியும் எனக்கூறும் மத்திய அரசை சேர்ந்தவர்கள் விவசாயிகளுடன் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லியிலுள்ள முக்கிய சாலைகளில் குவிந்துள்ள விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு, சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாளை மறுநாள் விவசாயிகளுடன் 6 ஆவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அவர்களுக்கு டெல்லி மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் குறித்து திறந்த வெளியில் மத்திய அரசு விவாதித்த தயாரா? அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால், “விவசாயிகள் போதுமான அளவிற்கு அறிந்திருக்கவில்லை எனக்கூறுபவர்கள் திறந்த வெளியில் அச்சட்டங்கள் குறித்து விளக்க தயாரா? வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் பொதுவெளியில் விவாதிக்க வேண்டும். அப்படி விவாதம் நடைபெற்றால் யார் அதிகம் தெரிந்து இருக்கிறார்கள் என்பது தெரியும். விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக தெருக்களில் கடுங்குளிரில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” எனக் கூறினார்.