டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாம் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது.

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

இன்று டாஸ் விண் பண்ணிய சென்னை கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பிரிதிவ் ஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஓப்பனிங் இறங்கினார்கள்.

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

பிரிதிவ் ஷா 64, ஷிகர் தவான் 35, ரிஷப் பண்ட் 37, ஸ்ரேயாஸ் 26, மார்கஸ் ஸ்டொயினிஸ் 5 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோர் 175 உயர்த்தியிருந்தார்கள்.

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

வெற்றி இலக்கு 176 ரன்கள் என்பதை எதிர்கொண்டு ஓப்பனிங் முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இறங்கினர்.  இருவருமே வெகு நிதானமாக விளையாடத் தொடங்கினர். முதலில் இந்தப் போக்கை உடைத்து வாட்சன் அடித்து ஆடினார்.  1 சிக்ஸ் 1 ஃபோருடன் 16 பந்துகளில் 14 ரன்கல் எடுத்த நிலையில் அக்சர் படேல் வீசிய பந்தை இறங்கி அடித்தபோது, அதை ஹெட்மேயர் பிடித்து வாட்சனை அவுட்டாக்கினார்.

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

இந்தப் போட்டியில் அவர் 12 ரன்கள் அடித்தபோது ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாட்சன் 1000 ரன்களை எடுத்திருந்தார்.

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

அணியின் ஸ்கோர் 34 ஆக இருக்கும்போது முரளி விஜய் அவுட்டானார். அவர் 15 ரன்களில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதோடு மூன்றாவது மேட்சிலும் சொற்ப ரன்னில் அவுட்டாகியுள்ளார் விஜய். அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 5 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகினார்.

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

டூ பிளஸி – கேதர் ஜாதவ் ஜோடி நிலைத்து ஆடியது. ஆனால், ரன் ரேட் கீழே போய்விட்டது. அணியின் ஸ்கோர் 98 ரன்களாக இருக்கையில் நோர்க்கியா வீசிய பந்தில் எல்பிடபுள்யூ வாகி அவுட்டானர் கேதர் ஜாதவ். அவர் மூன்று பவுண்டரிகளோடு 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார்.

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய டு பிளஸி, ஐபிஎல் போட்டியில் 2000 ரன்களைக் கடந்தார். ரபாடா வீசிய பந்தைத் தூக்கி அடித்தார் டூ பிளஸி. அழகாக வந்த கேட்சை ஹெட்மெயர் கோட்டை விட்டார். ஆனால், அதன் அடுத்த பந்தில் கீப்பரிடம் கேட்ச் தந்து அவுட்டானார் டூ பிளசி. அவர் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார்.

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

கேப்டன் தோனி இறங்கியதும் அடித்து ஆடினார். ஆனால், அணியின் தோல்வி உறுதியானதும், அவரின் ஆட்டத்தில் தளர்ச்சி ஏற்பட்டது. கடைசி ஓவரில் ரபரா வீசிய பந்தில் அவுட்டானர் தோனி. அப்போது அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

சாம்கரனும் ஜடேஜாவும் வரை ஆடினர். கடைசி பந்தில் ஜடேஜா அவுட்டாகினார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 131 எடுத்தனர். இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

இதன் மூலம், ஆடிய இரண்டு போட்டிகளிலும் டெல்லி வென்றுள்ளது. சென்னை மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்று, இரண்டில் தோல்வியைத் தழுவியுள்ளது.