டெல்லி அணியின் தலையில் விழுந்த பேரிடி… வேகப்புயலுக்கு கொரோனா!

 

டெல்லி அணியின் தலையில் விழுந்த பேரிடி… வேகப்புயலுக்கு கொரோனா!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களின்றியே அனைத்துப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. வீரர்கள் அனைவரும் பயோ பப்பிளில் பாதுகாப்பாக இருக்கின்றனர். தொடர் தொடங்குவதற்கு முன்னதாகப் பரிசோதனையில் குறிப்பிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டெல்லி அணியின் தலையில் விழுந்த பேரிடி… வேகப்புயலுக்கு கொரோனா!

அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கொல்கத்தா வீரர் பூரண குணமடைந்து அணிக்குத் திரும்பிவிட்டார். தற்போது அணியுடன் இணையாமல் தனிமைப்படுத்தலில் தென்னாப்பிரிக்க வீரர்களில் சிலர் உள்ளனர். குறிப்பாக டெல்லி அணியின் வெற்றிக்கூட்டணி பவுலர்களான ரபாடாவும் நோர்க்கியாவும் ஏப்ரல் 6ஆம் தேதி மும்பை வந்தார்கள். இதனால் அவர்கள் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தனர். இவர்கள் சிஎஸ்கே அணியுடனான ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

டெல்லி அணியின் தலையில் விழுந்த பேரிடி… வேகப்புயலுக்கு கொரோனா!

இச்சூழலில் இன்று நோர்க்கியாவுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே அணியின் முக்கிய வீரரும் கேப்டனுமான ஸ்ரேயாஷ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அணியுடன் அவர் இணையவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுகிறார். தனிமைப்படுத்தல் முடிந்திருப்பதால் ரபாடா மட்டுமே அணிக்குள் திரும்புவார். இதனால் டெல்லி அணி சோகம் கலந்த உற்சாகத்தில் இருக்கிறது.