“தூதரக உறவின் 29ஆம் ஆண்டில் தாக்குதல்; 2012 தாக்குதலுடன் தொடர்பு” – இஸ்ரேல் தூதர் கிளப்பும் சந்தேகம்!

“தூதரக உறவின் 29ஆம் ஆண்டில் தாக்குதல்; 2012 தாக்குதலுடன் தொடர்பு” – இஸ்ரேல் தூதர் கிளப்பும் சந்தேகம்!

இந்திய-இஸ்ரேல் தூதரக உறவுகள் நடைமுறைக்கு வந்து 29 ஆண்டுகள் முடிவடைந்த நேற்றைய நாளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி என்றும், 2012ஆம் ஆண்டு இதேபோல ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகவும் கூறி இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மால்கா பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

“தூதரக உறவின் 29ஆம் ஆண்டில் தாக்குதல்; 2012 தாக்குதலுடன் தொடர்பு” – இஸ்ரேல் தூதர் கிளப்பும் சந்தேகம்!

டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிப்புகள் எதுவும் பெரிதாக இல்லை. மிகப் பெரிய சதி திட்டத்திற்கான வெள்ளோட்டமாக இந்தச் சிறிய குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திப் பார்த்திருக்கலாம் என உளவுத் துறை கூறியிருக்கிறது. குறிப்பாக, இஸ்ரேல் தூதரகத்தின் அருகே சம்பவம் நிகழ்த்தப்பட்டது அந்த நாட்டையும் சற்று அதிரவைத்துள்ளது.

“தூதரக உறவின் 29ஆம் ஆண்டில் தாக்குதல்; 2012 தாக்குதலுடன் தொடர்பு” – இஸ்ரேல் தூதர் கிளப்பும் சந்தேகம்!

இதுதொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்களை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மால்கா வெளியிட்டிருக்கிறார். சில சந்தேகங்களையும் அவர் எழுப்பியிருக்கிறார். அவர், “இஸ்ரேல் தூதரகத்தைக் குறிவைத்து சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பதால் இது முழுக்க முழுக்க பயங்கரவாத தாக்குதலாகவே இருக்கும் என்பது எங்கள் தரப்பின் அனுமானமாக இருக்கிறது. இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் ராஜாங்க ரீதியான வெளியுறவுக் கொள்கை உறவுகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து நேற்றோடு 29 ஆண்டுகள் நிறைவுற்றது.

“தூதரக உறவின் 29ஆம் ஆண்டில் தாக்குதல்; 2012 தாக்குதலுடன் தொடர்பு” – இஸ்ரேல் தூதர் கிளப்பும் சந்தேகம்!

இதே தினத்தில் அரங்கேறியிருக்கும் குண்டுவெடிப்பு சம்பவம் நிச்சயமாக திட்டமிட்ட சதி. 2012ஆம் ஆண்டு இதே இஸ்ரேல் தூதரகத்திற்குச் சற்று தொலைவில் இஸ்ரேல் தூதர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்று நிகழ்ந்தது. அதனுடன் இந்தத் தாக்குதல் தொடர்பு கொண்டிருக்கலாம். அனைத்து வகையிலும் விசாரணை மேற்கொள்ளப்படும். இரு தரப்பிலும் உயர் மட்ட அதிகாரிகள் உரையாடல் நிகழ்த்திவருகின்றனர். விசாரணை நடத்தப்பட்டு விரைவில் இதற்குப் பின்னால் யார் உள்ளார்கள் என்பது தெரியவரும்” என்று பேசியுள்ளார்.

“தூதரக உறவின் 29ஆம் ஆண்டில் தாக்குதல்; 2012 தாக்குதலுடன் தொடர்பு” – இஸ்ரேல் தூதர் கிளப்பும் சந்தேகம்!

இச்சூழலில் இதுவரை யாருமே கேள்விப்பட்டிராத ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேல் தூதர் ரான் மால்காவின் சந்தேகம் கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியிருக்கிறது.