4 மாசமா வேலை இல்லை.. ஸ்டிரைக் எல்லாம் பண்ண மாட்டோம்.. ஆட்டோ, டாக்சி யூனியன்கள் தகவல்

 

4 மாசமா வேலை இல்லை.. ஸ்டிரைக் எல்லாம் பண்ண மாட்டோம்.. ஆட்டோ, டாக்சி யூனியன்கள் தகவல்

நாங்களே ஏற்கனவே 4 மாசமா வேலை இல்லாமல் இருக்கிறோம் ஆகையால் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்று டெல்லி ஆட்டோ, டாக்சி யூனியன்கள் தெளிவுப்படுத்தியுள்ளன.

டெல்லியின் எல்லை பகுதிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை 2 நாட்களில் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால், டெல்லி என்.சி.ஆரில் தனியார் கேப்ஸ், டாக்சி, ஆட்டோ மற்றும் டிரக்குகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அந்த யூனியன்கள் எச்சரிக்கை செய்தன.

4 மாசமா வேலை இல்லை.. ஸ்டிரைக் எல்லாம் பண்ண மாட்டோம்.. ஆட்டோ, டாக்சி யூனியன்கள் தகவல்
ஆட்டோக்கள்

இந்த சூழ்நிலையில் திடீர் திருப்பமாக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என்று டெல்லி ஆட்டோ ரிக்ஷா மற்றும் டெல்லி பிரதேச டாக்சி யூனியன் என்று தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த யூனியனின் பொது செயலாளர் ராஜேந்தர் சோனி கூறியதாவது: நாங்கள் முழு நாடு போல் போராடும் விவசாயிகளுடன் உள்ளோம். ஆனால் டெல்லி ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

4 மாசமா வேலை இல்லை.. ஸ்டிரைக் எல்லாம் பண்ண மாட்டோம்.. ஆட்டோ, டாக்சி யூனியன்கள் தகவல்
ராஜேந்தர் சோனி

நாங்கள் ஏற்கனவே 4 மாதங்களாக வேலையில்லாமல் இருக்கிறோம். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாது. இது ஒரு அரசியல் விஷயமாக மாறியுள்ளது. எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள் காங்கிரஸின் உத்தரவில் பேரில் இந்த பிரச்சினையை அரசியல் ஆக்குகின்றன. கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் டெல்லி மக்களுக்கு சிரமத்தை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. அவர்களுடன் நிற்பது எங்களது கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.