லோக்கல் முதல் பாரின் சரக்கு வரை ஆர்டர் செய்தால் டெலிவரி – துள்ளிக்குதிக்கும் மதுப்பிரியர்கள்!

லோக்கல் முதல் பாரின் சரக்கு வரை ஆர்டர் செய்தால் டெலிவரி – துள்ளிக்குதிக்கும் மதுப்பிரியர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் டெல்லி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனை கட்டுக்குள் கொண்டுவர தளர்வுகளற்ற ஊரடங்கை முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேல் ஊரடங்கு நடைமுறையில் இருந்ததன் விளைவாக தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

லோக்கல் முதல் பாரின் சரக்கு வரை ஆர்டர் செய்தால் டெலிவரி – துள்ளிக்குதிக்கும் மதுப்பிரியர்கள்!
லோக்கல் முதல் பாரின் சரக்கு வரை ஆர்டர் செய்தால் டெலிவரி – துள்ளிக்குதிக்கும் மதுப்பிரியர்கள்!

நேற்று தொழில் நிறுவனங்கள் செயல்பட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அடுத்தபடியாக மதுப்பிரியர்களைச் சந்தேசப்படுத்தும் வகையில் அசத்தலான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. அதாவது வீட்டுக்கே சென்று மதுபானங்களை டெலிவரி செய்ய அனுமதி அளித்துள்ளது. இதற்காக மொபைல் ஆப் மற்றும் இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு பதிவுசெய்து லோக்கல் மதுபானம் முதல் வெளிநாட்டு மதுபானங்கள் வரை அனைத்தையும் வாங்கி கொள்ளலாம். உணவு, மளிகைப் பொருட்கள் போல ஆர்டர் செய்து பணம் செலுத்தினாலே போதும். மதுபாட்டில்கள் வீடு தேடி வந்துசேரும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி எல்-13 லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே வீடுகளுக்கு சென்று மதுபானங்களை டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுவர். இந்த உரிமம் வைத்திருப்பவர்களிடம் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெறப்பட்டால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும். மேலும், விடுதி, அலுவலகம் மற்றும் நிறுவனத்திற்கும் மதுபானங்கள் விநியோகம் செய்யக் கூடாது. இந்த நடைமுறைகள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.