எச்சரிக்கை…! உங்க பணத்துக்கு வேட்டு வைக்கும் இந்த 8 மொபைல் ஆப்களை உடனே டெலிட் செய்யுங்க!

 

எச்சரிக்கை…! உங்க பணத்துக்கு வேட்டு வைக்கும் இந்த 8 மொபைல் ஆப்களை உடனே டெலிட் செய்யுங்க!

சமீப காலமாக கிரிப்டோ கரன்சி (Crypto currency) எனப்படும் டிஜிட்டல் வடிவிலான பணத்தின் மீது மக்களின் நாட்டம் அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் கிரிப்டோ கரன்சி தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு எந்தவித தடையையும் மத்திய அரசு இதுவரை விதிக்கவில்லை. கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் அதன் வளர்ச்சி அபரிமிதமாகியுள்ளது.

எச்சரிக்கை…! உங்க பணத்துக்கு வேட்டு வைக்கும் இந்த 8 மொபைல் ஆப்களை உடனே டெலிட் செய்யுங்க!

பல்வேறு நிறுவனங்கள் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு கிரிப்டோ கரன்சிக்கும் குறிப்பிட்ட மதிப்பு உண்டு. மார்க்கெட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் ஏறி இறங்கும். மிக மிக முக்கியமாக எந்த நாட்டின் அரசும் இந்த கிரிப்டோ கரன்சியில் ஈடுபடாது. இந்தியாவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எவ்வளவு ரிஸ்க்கோ அதைவிட பன்மடங்கு ரிஸ்க் கிரிப்டோகரன்சியில் இருக்கிறது. ஆகவே மிகவும் சூதனமாகவே இதனைக் கையாள வேண்டும். என் பணம் போய்விட்டது என எங்கேயும் நாம் புகார் தெரிவிக்க முடியாது. தெரிவித்தாலும் நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது.

எச்சரிக்கை…! உங்க பணத்துக்கு வேட்டு வைக்கும் இந்த 8 மொபைல் ஆப்களை உடனே டெலிட் செய்யுங்க!

ஆனால் ரிஸ்க் எடுப்பது தானே மக்களின் தலையாயப் பண்புகளில் ஒன்று. இந்த கிரிப்டோகரன்சி மீதும் மோகத்தை அதிகப்படுத்திக் கொண்டனார். இவர்களின் மோகத்தை மூலதனமாகக் கொண்டு ஹேக்கர்கள் கைவரிசை காட்டுகின்றனர். கிரிப்டோகரன்சிகளை நிர்வகிப்பதற்காக ஏராளமான நிறுவனங்கள் சொந்தமாக மொபைல் ஆப்களையும் இணையதளங்களையும் வைத்துள்ளன. இதன்மூலம் மக்கள் எளிதாக கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்து வந்தனர். இங்கே தான் ஹேக்கர்கள் கைவைத்தனர். அதாவது கிரிப்டோகரன்சி ஆப்பை போலியாக உருவாக்கி அதில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.

எச்சரிக்கை…! உங்க பணத்துக்கு வேட்டு வைக்கும் இந்த 8 மொபைல் ஆப்களை உடனே டெலிட் செய்யுங்க!

மக்களும் அதனை நம்பி ஹேக்கர்கள் சொன்ன ஆப்களை தங்களது மொபைல்களில் இன்ஸ்டால் செய்துள்ளனர். இன்ஸ்டால் செய்தவுடன் ஹேக்கர்கள் அவர்களின் மொபைலை ஹேக் செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் விளம்பரங்களைக் காட்டி தங்களது ஆப்களை இன்ஸ்டால் செய்ய குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். கடந்த 1 வருடமாக இந்த ஸ்டைலில் கிட்டத்தட்ட 4,500 பேரை ஏமாற்றியுள்ளனர். இந்த விவகாரம் பெரிதானதையடுத்து கூகுள் நிறுவனம் மக்களிடம் மோசடி செய்யும் 8 ஆப்களை பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

அவை பின்வருமாறு:

1.BitFunds – Crypto Cloud Mining
2.Bitcoin Miner – Cloud Mining
3.Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet
4.Crypto Holic – Bitcoin Cloud Mining
5.Daily Bitcoin Rewards – Cloud Based Mining System
6.Bitcoin 2021
7.MineBit Pro – Crypto Cloud Mining & btc miner
8.Ethereum (ETH) – Pool Mining Cloud

எச்சரிக்கை…! உங்க பணத்துக்கு வேட்டு வைக்கும் இந்த 8 மொபைல் ஆப்களை உடனே டெலிட் செய்யுங்க!

இந்த எட்டு மொபைல் ஆப்களையும் கூகுள் நீக்கிவிட்டது. இருப்பினும் இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருந்தால் யோசிக்காமல் உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை உங்கள் மொபைலில் வைத்திருக்க வைத்திருக்க உங்கள் பணம் தான் போகும் என்பதால் அன்-இன்ஸ்டால் செய்வது சாலச்சிறந்தது. அதிகாரப்பூர்வமான நம்பகத்தகுந்த கிரிப்டோகரன்சி ஆப்களின் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடலாம். ஆனால் அதிலும் ரிஸ்க் இருப்பதை மறக்கக் கூடாது.