பேரறிவாளன் விடுதலை – மீண்டும் குட்டையை குழப்பும் மத்திய அரசு

 

பேரறிவாளன் விடுதலை – மீண்டும் குட்டையை குழப்பும் மத்திய அரசு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரும் வழக்கில் இன்று மத்திய அரசு அதிரடியான கருத்தை முன் வைத்துளது.

1991 -ம் ஆண்டில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குண்டு வைத்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யுமாறு பல ஆண்டுகளாக தமிழக அமைப்புகள் போராடி வருகின்றன. பேரறிவாளனின் அம்மா அற்புதம் கா; நூற்றாண்டாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து விட்டார்.

பேரறிவாளன் விடுதலை – மீண்டும் குட்டையை குழப்பும் மத்திய அரசு

2017 ஆம் ஆண்டு பேரறிவாளன் விடுதலை குறித்த தீர்மானத்தை இயற்றிய தமிழ்நாடு அரசு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால், மூன்றாண்டுகளுக்கு மேலாக தமிழக ஆளுநர் இந்தத் தீர்மானம் குறித்து எந்த முடிவை எடுக்காமல் இருக்கிறார். திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆளுநரைச் சந்தித்து விரைவில் இது குறித்து நல்ல முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொண்டன. அப்பவும் முடிவெடுக்காததால் நீதிமன்றத்தை பேரறிவாளன் தரப்பில் நாடப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை – மீண்டும் குட்டையை குழப்பும் மத்திய அரசு

அதில் மத்திய அரசு, “பேரறிவாளன் விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என மறுபடியும் தெரிவித்துள்ளது. இது மீண்டும் குட்டையைக் குழப்புவதைப் போல என்று தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றன.