பொது நிதிக்கு வழங்கவேண்டிய தொகை இழுத்தடிப்பு! தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்!

 

பொது நிதிக்கு வழங்கவேண்டிய தொகை இழுத்தடிப்பு! தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்!

ஊராட்சி பொது நிதிக்கு வழங்கப்பட வேண்டிய தொகையினை 9 மாதமாக வழங்காமல் இருப்பதைக் கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ’’ஊராட்சி மன்றங்களின் பொது நீதிக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை 9மாதம் வழங்காமல் இருப்பதால் நிர்வாக பிரச்சினையை சீர் செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே நிதியினை உடனே ஒதுக்க வேண்டும் . புதிய அரசு நிதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் .

மத்திய அரசின் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர் ஒப்புதல் பெற்று ஒப்பந்தப்புள்ளி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி தலைவர்களின் ஒப்புதலோடு ஒப்பந்தப்புள்ளி கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்க இயலாது15வது நிதிக்குழு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊராட்சி மன்றத்திற்கு உடனே விடுவிக்க வேண்டும். பதினைந்தாவது நிதி குழுவில் குடிநீர் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 25 சதவீத தொகையை ஊராட்சி மன்ற தலைவர் ஒப்புதல் இல்லாமல் திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடாது என கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த தலைவர் மல்லிகை V. முத்துராமலிங்கம் , செயலாளர் மு.மோகன் , பொருளாளர் வத்சலா முத்துராமன் உள்ளிட்ட பல ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு அளித்தனர்.