ரயில்வே திட்ட வளர்ச்சிப் பணிகளில் தாமதம் – எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை!!

 

ரயில்வே திட்ட வளர்ச்சிப் பணிகளில்  தாமதம் – எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை!!

தமிழகத்தின் முக்கியமான ரயில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுவதில் கடந்த ஆட்சிக் காலத்தில் உருவான தடைகளை நீக்க கோரி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ரயில்வே திட்ட வளர்ச்சிப் பணிகளில்  தாமதம் – எம்.பி. சு.வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை!!

மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ரயில்வே துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சி திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்த போது தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டிய, முக்கிய பிரச்சினையை ரயில்வே அதிகாரிகள் என்னிடம் சுட்டிக்காட்டினார்கள். அதனை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

மதுரை தூத்துக்குடி மணியாச்சி -நாகர்கோவில் ஆகிய இரு முக்கிய ரயில் வளர்ச்சி திட்டங்களான இரட்டை பாதை த்திட்டங்களும், மதுரை போடிநாயக்கனூர் மற்றும் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி அகலப்பாதை திட்டங்களும் , பேரளம் காரைக்கால் புதிய பாதை திட்டமும் மாற்றிக் 2022க்குள் முடிய வேண்டியவையாகும்.

ஆனால் மாவட்ட ஆட்சியர்கள் இந்த திட்டங்களில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்காததால் தாமதமாகின்றன . சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் . மாவட்ட ஆட்சியர் அந்த மண்ணை ஒரு சோதனைக் கூடத்தில் கொடுத்து அந்த மண்ணில் தாது பொருட்கள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது உயர் நீதிமன்ற உத்தரவு.

கடந்த ஆனால் முந்தைய அதிமுக அரசு இதற்கான சோதனைக் கூடங்களில் இருந்தாலும், உயர் நீதிமன்றத்தின் மற்ற கருத்துகள் குறித்து எந்த உத்தரவும் வழங்காததாலும் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் உருவான இந்த தடைகளால் முக்கியமான அடித்தள கட்டுமான ரயில் வளர்ச்சி பணிகள் முடிவடைவது தாமதமாகின்றன. எனவே தாங்கள் தலையிட்டு தமிழக அரசு பரிசோதனை கூடங்களை நிர்ணயம் செய்யவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து வரையறை செய்து உத்தரவிட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.