Home ஆன்மிகம் ‘தெய்வத்துள் தெய்வம்’… உங்கள் TTN BAKTHI யூடியூப் சேனலில்!

‘தெய்வத்துள் தெய்வம்’… உங்கள் TTN BAKTHI யூடியூப் சேனலில்!

நம்மிடையே நடமாடும் தெய்வமாக வணங்கப்படும் காஞ்சி மஹா பெரியவரின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாற்றை எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற நாடகமாக அரங்கேற்றியது. மஹா பெரியவாளின் வரலாற்று மேடை நாடகம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இதுவரை 29 முறை மேடை ஏறியுள்ளது. இந்த நாடகத்தை நேரில் பார்க்கமுடியாதவர்களுக்காக முதன்முறையாக காட்சி ஊடக வடிவில் நமது TTN BAKTHI யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. வரும் 8 ஆம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றிய சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், 1894ஆம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பிறந்தவர். 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதிவரை 87 ஆண்டுகள் இறைப்பணி செய்திருக்கிறார். நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்த இவரது வாழ்க்கை வரலாறே ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற பெயரில் காட்சி வடிவில் நம் வீடு தேடி வருகிறது. வரும் வாரங்களில் யூடியூபில் கண்டுகளிப்போம்… இணைந்திருங்கள் TTN BAKTHI உடன்…

டாப் தமிழ் நியூஸ் குழுமத்தின் ஆன்மீக யூடியூப் சேனலான TTN BAKTHI- இல் இந்நாடகத்தை காட்சிப்படுத்துவதையொட்டி, எங்கள் நிறுவனரும், எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவன இயக்குநர்களும் காஞ்சி பெரியவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை இன்று சந்தித்து ஆசிப்பெற்றனர்

மாவட்ட செய்திகள்

Most Popular

மாதவிலக்கு காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஸ்மூத்தி!

பொதுவாக பழங்களை கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. சில சமயங்களில் சர்க்கரை சேர்க்காமல் பழங்களை அரைத்து ஸ்மூத்தி போன்று எடுத்துக்கொள்ளலாம். ஐந்து பழங்களை ஒன்று சேர்த்து ஸ்மூத்தி...

ஹார்ட் அட்டாக் தவிர்க்க இந்த 5 விஷயத்தில் அலர்ட் தேவை!

உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு. ஹார்ட் அட்டாக் காரணமாக திடீர் திடீர் என்று நெருக்கமானவர்கள் உயிரிழப்பது பற்றிய செய்தியைக் கேட்டாலும் கூட அதில்...

அதிமுகவுக்கு மேலும் ஒரு செய்தித்தொடர்பாளர் நியமனம்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார் பேராசிரியர் ச. கல்யாண சுந்தரம். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்...

அமைச்சர் காமராஜூக்கு சீரியஸ்! மருத்துவமனைக்கு படையெடுத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா நோய் தொற்றுக்காரணமாக கடந்த 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் சிகிச்சை்காக...
Do NOT follow this link or you will be banned from the site!