கர்நாடகாவில் அக்.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்! – துணை முதல்வர் அறிவிப்பு

கர்நாடகாவில் அக்.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்! – துணை முதல்வர் அறிவிப்பு

கர்நாடகாவில் வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அக்.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்! – துணை முதல்வர் அறிவிப்பு

கர்நாடகாவில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் என்பதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இதனால் பார்கள், கேளிக்கை விடுதிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை, ஆனால் பார், கேளிக்கை விடுதிக்கே அனுமதியா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

கர்நாடகாவில் அக்.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்! – துணை முதல்வர் அறிவிப்பு

இதைத் தொடர்ந்து கல்லூரிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான அஸ்வத் நாராயணன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்

தொடங்கப்படும். அக்டோபர் 1ம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க அரசு தயாராகி வருகிறது.

கர்நாடகாவில் அக்.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்! – துணை முதல்வர் அறிவிப்பு

கல்வியாண்டு தொடங்கியதும் இளங்கலை, பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடத்தப்படும்.
கல்லூரிகளைத் திறப்பது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு காத்திருக்கிறோம். அது கிடைத்ததும் மாநில அரசு உத்தரவைப் பிறப்பிக்கும்” என்று கூறியுள்ளார்.