• April
    06
    Monday

Main Area

Main



பிரபல நடிகை அணிந்திருந்த ரெயின் கோட் ஆடை ;கலாய்த்த நெட்டிசன்கள்! 

deepika-in-raincoat
deepika-in-raincoat

பாலிவுட்டின் ஸ்டைல் ஐகான் என அழைக்கப்படும் தீபிகா படுகோனே தனது 'சப்பக்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளிலும் அதற்கான நேர்காணல்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.தினமும் மீடியாக்களின் வெளிச்சம் பட்டுக்கொண்டே இருப்பதால்,அவரும் ஏகத்துக்கும் யோசிச்சு விதவிதமான உடைகளில் தினமும் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். படத்தைப் பற்றிய செய்தி வருதோ இல்லையோ அவர் போட்டுக்கொண்டு வரும் ட்ரெஸ் பற்றிய சிலாகிப்பும் கமெண்ட்ஸும் அனல் பறக்கும்.

நிலையில் நேற்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
தீபிகா.அந்த நிகழ்ச்சிக்காக, லெதர் ஜெர்கின் மாதிரியான பிளாக் கலர் ஆடையை அணிந்திருந்தார் அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் இப்போது அவை வைரலாகி வருகின்றன.

 

பலர் புகைப்படங்களுக்கு கீழே ‘ ரெயின் கோட் ‘, ‘சோபா கவர்’ என்றும் பலரும் கிண்டல்,கேலி என்று வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

tweets


தீபிகாவின் தீவிர ரசிகர்கள் சிலர்,’ தீபிகா மும்பையின் கிளைமேட்டிற்கு ஏற்பதுபோன்று ஆடை அணிந்துள்ளார்’ என முட்டுக்கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.