“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரெயொரு வெள்ளிப் பதக்கத்துடன் 42ஆவது இடத்தில் நிற்கிறது. மற்ற நாடுகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்க இந்தியாவோ ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது. முதல் நாளில் பளுதூக்குதல் போட்டியில் மீரா பாய் வெள்ளிப் பதக்கம் வாங்கி கொடுத்ததோடு அப்படியே நிற்கிறது பதக்க கணக்கு. ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்தியகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது.

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

மகளிர் வில்வித்தைப் பிரிவில் லீக் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிஃபர் முன்சினோ ஃபெர்னாண்டஸ் உடன் மோதினார். இந்தப் போட்டியில் ஜெனிஃபரை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். தொடக்கத்தில் இரு செட்களையும் இழந்த தீபிகா குமாரி அடுத்த இரு செட்களில் தான் யார் என்பதை நிரூபித்தார். அடுத்தடுத்த செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய தீபிகா குமாரி 4-2 முன்னிலை பெற்றார்.

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

ஆனால் அடுத்த இரு செட்களில் ஜெனிஃபர் முன்னிலை பெற ஆட்டம் பரபரப்பானது. ஆனால் அடுத்த இரு செட்களிலும் தீபிகா வென்று ஜெனிஃபரை தோற்கடித்தார். உலகின் நம்பர் 1 வீராங்கனை என்றால் எப்படி விளையாடுவார் என்பதை தீபிகா குமாரி அனைவருக்கும் உணர்த்தினார். அதேபோல மிடில்வெயிட் குத்துச்சண்டையில் பூஜா ராணி வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

முன்னதாக, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி-பிரவின் ஜாதவ் கூட்டணி, காலிறுதியில் தென்கொரியாவின் அன் சான்-கிம் ஜி டோக் ஜோடியிடம் 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய் வெற்றிவாய்ப்பை இழந்தார். அதேபோல காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரவின் ஜாதவ் உலகின் நம்பர் 1 வீரர் பிராடி எலிசனுடன் மோதினார். மிகக் கடுமையாகப் போராடிய அவர் 6-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார்.