ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ் தீபாவளி!

 

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

எவிக்‌ஷனுக்கு இல்ல… புது கேப்டன் செலக்‌ஷனும் இல்ல… பண்டிகை நாள் எப்பிசோட், அதனால ரொம்ப திட்டவும் கூடாது… சண்டையைப் பத்தி பேசி மனசு நோகக்கூடாது… ஆனா, நிகழ்ச்சிய மட்டும் இரண்டு மணிநேரமாக நீட்டிப்பீங்க… நான் என்னதான் செய்யறது’னு பம்மல் கே சம்பந்தம் படத்தில் சிவன் வேஷம் போட்ட கமல் மாதிரி நேற்றைய எப்பிசோட் முழுக்க கமல் செய்த இரண்டு விஷயங்கள்.. ஒண்ணு. ‘எக்ஸலண்ட்’னு சொல்லி நழுவியது.. இன்னொண்ணு… நமுட்டுச் சிரிப்போடு அடுத்த ஆளுனு சொல்லிட்டு இருந்தது.

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

தீபாவளி என்பதால் ட்ரடினஷலோடு வேட்டி, சட்டையோடு தரிசனமளித்தார் கமல். ஏற்கெனவே ட்விட்டரில் பதிவிட்ட தீபாவளி வாழ்த்து வரிகளை இங்கேயும் ஒருமுறை சொன்னார். அங்கேயே விளக்கம் சொல்லுங்கன்னு கமெண்டிட்டு இருந்தாங்க…

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள்

வழக்கமா தீபாவளி என்றாலே நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி பாட்டுதான் போடுவார்கள். காலையில் சுறுசுறுப்பாக எழுப்ப வேண்டியிருந்ததால் அட்டகாசம் படத்திலிருந்து தீபாவளி.. தல தீபாவளியை ஒலிக்க விட்டார் தம்பி.

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

புது கேப்டனாக பொறுப்பேற்ற ஆஜித்க்கு அட்வைஸிட்டு இருந்தார் சம்யுக்தா. நான், பாலா எல்லாம் கொஞ்சம் டெரர் ஆளுங்க… பார்த்தா அப்படித் தெரியாது… பார்த்து சூதானமா நடந்துகோ’னு எச்சரிக்கை கொடுத்தார் சம்யுக்தா.

இன்னொரு பக்கம், ‘அன்பால மாத்த முடியும்னு நம்பினேன். அது முடியாது தெரிஞ்சுகிட்டேன்’னு கேபியிடம் அணத்திட்டு இருந்தார் அர்ச்சனா. பாலாவைத்தானே சொல்றீங்கனு கேட்கிற மாதிரி முகத்தை வெச்சிட்டு இருந்தார் கேபி. நிஷா பேக்ரவுண்டில் ஏதோ சொல்லிட்டு இருந்தார்.

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

’ஃபைனல் வரை போறதுக்கு என்ன பண்ண போறேன்னு’ சுசி நேற்று ஷிவானியிடம் கேட்டதை ஈஸியா எடுத்துட்ட மாதிரி இருந்துச்சு. ஆனா, அது ஷிவானி மனசில் ஆழமா பதிஞ்சிடுச்சு போல. அதனால, இன்னிக்கு ‘எல்லாரும் வாயை வெச்சு பிழைச்சிக்கிறாங்க… நானெல்லாம் வாயில்லா பூச்சி.. என்ன ஆகப்போறேனோ?’னு சம்யுக்தாவிடம் அணத்த, நானும் அப்படித்தான் (என்னாது) மறு அணத்தலாகிட்டு இருந்தாங்க.

மூக்குத்தி அம்மன் ட்ரைலர் போட்டுக்காட்ட, கைத்தட்டி ரசித்தனர். உண்மையில், வெளியே நடக்கும் செய்தியாகக் கிடைக்கும் ஒவ்வொரு செய்தியும் ஆச்சர்யமாகவே இருக்கும்.

சனிக்கிழமை

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

வணக்கமும் வாழ்த்துகளும் சொல்லி பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார் கமல். பண்டிகை வாரம், எவிக்‌ஷன் இல்ல… ஜாலியா இருந்தீங்க.. இருங்க கொளுத்தி போடறேன்னு விதவிதமான வெடி வகைகளைக் கொடுத்து… ஒவ்வொருவருக்கும் பொருத்தமான வெடிகளைப் பரிசளிக்க சொன்னார்,

ராக்கெட் பாலா, சங்கச்சக்கர கேபி, ரிவால்வர் ரீட்டா ஷனம், புஷ்வாணம் சம்யுக்தா, பாம்பு மாத்திரை சுசித்ரா, மத்தாப்பு ரம்யா, வான வேடிக்கை அர்ச்சனா, ஊசி வெடி ஷிவானி, வெங்காய வெடி ஆரி, பொட்டு வெடி சோம்ஸ், லெஷ்மி வெடி நிஷா, அணுகுண்டு ரியோ, ஊதுபத்தி ஆஜித், டபுள் ஷாட் ரமேஷ் என்பதாக வெடிகள் பிரிக்கப்பட்டன.

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

அதில், சுசித்ராவுக்கும், ஷிவானிக்கும் கொடுக்கும்போது சின்ன முகச்சுளிப்புகள்… ‘இப்போ வெடியை எடுத்ததும் சிரிப்பாங்க பாருங்க’னு ரம்யாவுக்கு இண்ட்ரோ கொடுத்தார் கமல்.

சின்ன பிரேக் விட்டு, கடிதம் எழுதிய விஷயத்துக்கு வந்தார். ஆல்கஹாலுக்கு எழுதிய கடிதத்திற்கு ஒரு குட்டு வைத்தார். விளம்பரே பண்றதுல்ல நீங்க லெட்டர் வேறையா… என்க, உண்மையில் ரியோ எழுதிய கடிதம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது என்பதே பலரின் கருத்து. ஒவ்வொருவரும் தங்கள் கடிதம் பற்றி சொல்ல, சின்னச் சின்ன கமெண்டினார் கமல்.

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

மலைப்பகுதியில் 15 கிலோமீட்டர் நடந்து சென்று கடிதங்களைச் சேர்த்த சிவன் எனும் ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரை வீடியோ சேட்டில் அழைத்து பாராட்டினார் கமல். உண்மையில், மலைப்பகுதியில் பயணித்தவர்களுக்குத் தெரியும். சின்னச் சின்னப் பொருள்கூட கீழே நிலப்பகுதியிருந்து வரவேண்டும். அதற்கு அந்தப் பொருளை விட பல மடங்கு செலவு செய்வார்கள். அந்த வகையில் சிவனின் பங்கு மகத்தானது. ‘அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள்..’ என்பதை விளக்கி, ஜனவரி புத்தாண்டுக்கு அவர்களுக்கு கடிதம் எழுதச் சொன்னார் கமல்.

இப்போ நீங்க எழுதின லெட்டரை பிரேம் பண்ணி, உரியவரிடம் கொடுங்கனு கமல் சொன்னதும், அப்ப ரியோ யார்கிட்ட கொடுப்பான் சார் என டைமிங்கில் கவுண்டர் கொடுத்தார் நிஷா.

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

பாட்டி அர்ச்சனா, சயிண்ட்டிஸ்ட் ரியோ, நிஷாவுக்கு பாராட்டுகளைப் பரிமாறினார் கமல். அடுத்து அனிதாவின் பஞ்சாயத்துக்கு வந்தார். நீங்க ஏன் இவங்க சொல்றதால வெளியில இருக்கிறவங்க தப்பா புரிஞ்சுப்பாங்கனு நினைக்கிறீங்கன்னு கேட்டது சரியான பாயிண்ட். ஆனா, அனிதா விஷயத்திற்குள்ளேயே போகாமல், தன்னை தற்காத்து கொள்ள ஆடும்போது விஷயம் பெரியதாக வெடித்துவிடுகிறது. கமல் பிரேக் விட்டு விலகினார்.

பிரேக் முடிந்து கமல் வந்ததுகூட தெரியாமல், அனிதா – ரியோ, அர்ச்சனா உரையாடல் போய்ட்டு இருந்துச்சு. கடகடனு அனிதா பேசி முடிஞ்சதும் ரியோ பேச ஆரம்பிக்க, சில நொடிகளில் குறுக்கிட்டார் அனிதா. ‘நீ பேசி முடிச்சபிறகுதானே.. நான் பேச ஆரம்பித்தேன்’என ரியோ சொன்னதும், நான் இன்னும் பேசி முடிக்கலனு பழைய பஞ்சாங்கத்தை திறந்தார். மறுபடியும் சில நிமிடங்கள் பேசிமுடித்ததும், ரியோ பேச ஆரம்பித்ததும், எனக்கு அட்வைஸ் பண்ண போறீங்களா…னு தற்காப்பு ஆட்டத்தை ஆட… ரியோ பொறுமை இழந்தார். இது அனிதாவின் இயல்பு குணமாகக்கூட இருக்கலாம். அவரின் இன்னொசென்ஸை மற்றவரை காயப்படுத்தும்போது விலகி போகமாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறியே தெரியல… கமலின் சின்ன டயலாக்கோடு அடுத்த பகுதி தொடங்கியது.

பர்ஃபார்மன்ஸ்தான் அடுத்தது…

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

சுசி பாட்டெழுதி பாட, அவரோடு ஆஜித்தும் சேர்ந்துகொள்ள பிக்பாஸ் வீட்டைப் பற்றி பாடலைப் பாடினார்கள். ‘எப்போதும் பழைய சோறு துன்னறோம்’னு பாடினாங்க. உண்மையா பிக்கி.

நிஷா ஸ்டேண்டப் காமெடி பண்ணினார். பல பட்டிமன்ற ஜோக்குகள். பிக்பாஸ் வீட்டைப் பற்றி இணைத்து சொன்ன ஜோக்குகள் சிரிக்க வைத்தன. ஆனா, செம ஃப்ளோ. தோற்றத்திலும் மொழி உச்சரிப்பிலும் மனோரமாவை நினைவூட்டினார். நடிக்க வாய்ப்புகிடைக்கும்பட்சத்தில் அதுசாத்தியமும்கூட.

மார்னிங் பாட்டுக்கு ஒவ்வொருவரும் எப்படி ஆடுவார்களுன்னு கேபியும் ரமேஷூம் செய்துகாட்டினார்கள். சுசித்ரா, நிஷா, பாலா பற்றிய ஆக்‌ஷன்ஸ் அருமை.

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

ரியோவும், அர்ச்சனாவும் வீட்டில் உள்ள ஒவ்வொருவர் பற்றி இமிட்டேட் செய்து காட்டினார்கள். அதுவும் கோர்ட் சீனை அப்படியே ஆடியன்ஸ் மனநிலையை பிரதிபலித்து நடித்து காட்டியது செம. ஷனம்க்கு வார்னிங் கொடுக்கும்போதெல்லாம் அவர் சலித்து உட்காருவதை ரியோ நடித்துக் காடியதும் அருமை. இதெல்லாம் நேரத்தை நீட்டிக்கத்தான் என்பது சொல்லாமல் புரிந்தது. அதனால்தான் கமல் இன்று நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டார்.

இடைவெளிக்குப் பிறகு, கமலிடம் பிடித்த விஷயங்களைக் கேட்க, அவர் செய்துகாட்டினார். சில நேரங்களில் அவர் மறந்துபோன படங்களிலிருந்து வசனங்களைப் பேசிக்காட்டச் சொன்னபோது சட்டென்று அதற்கு இணையான வேறொரு டயலாக்கை பேசி அழகாகச் சமாளித்தார் கமல். உதாரணமாக, வறுமை நிறம் சிவப்பு படத்தின் டயலாக் கேட்ட பாலாவுக்கு தெலுங்கு கவிஞர் ஸ்ரீஸ்ரீயின் கவிதை வரிகளை பேச, புல்லரித்து விட்டது என வியந்தார் பாலா.

ராக்கெட் பாலா, பாம்பு மாத்திரை சுசித்ரா, ரிவால்வர் ரீட்டா ஷனம்.. இது பிக்பாஸ்  தீபாவளி!

ரியோ கிரேசி மோகன் டயலாக், ரம்யா அன்பே சிவம் வசனம், ரமேஷ் பல்ராம் நாயுடு வசனம், அர்ச்சனா குணா பாடல்… என எந்தப் படத்திலிருந்து எந்த வசனம், பாடல் வேண்டும் என ஒவ்வொருவரும் கேட்டதிலிருந்தே அவர்களின் ரசனை வெளிப்பட்டது.

 கமல் விடைபெற்று சென்றதும், அவரின் பரிசாக உடைகள் அனுப்பியிருந்தார். அதுவும் பெண்களுக்கு பட்டுப்புடவைகள் எனத் தெரிந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்த புடவைகளின் நிறங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, சுபம் போட்டார் பிக்கி.

இன்றும் (ஞாயிற்றுக்கிழமையும்) கிட்டத்தட்ட இதே போலத்தான் எப்பிசோட் செல்லும் என்றே தெரிகிறது.