தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா!

 

தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா!

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. வழக்கமாக இந்த விழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கோவிலுக்கு படையெடுப்பர். ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பால், பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற உள்ளது. கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா!

6ம் நாளான நேற்று வழக்கமாக நடைபெறும் 63 நாயன்மார்கள் ரத்து செய்யப்பட்டது. மாறாக, பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் விழாவின் 7ம் நாள் மற்றும் முக்கிய நாளான இன்று, மாட வீதி தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டு 5ம் பிரகாரத்தில் விநாயகர், அண்ணாமலையார் உள்ளிட்ட நால்வர் சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது தீபத்திருவிழாவன்று ஏற்றக்கூடிய கொப்பரை தயார் செய்யப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.