2.28 சதவிகிதம்தான்… இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா இறப்பு விகிதம்!

 

2.28 சதவிகிதம்தான்… இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா இறப்பு விகிதம்!

உலக நாடுகளுக்கு இப்போதுள்ள முதன்மையான சிக்கல், கொரோனாவை ஒழிப்பது எப்படி என்பதுதான். அந்தளவுக்கு கடந்த எட்டு மாதங்களாக உலகை அச்சுறுத்திகொண்டிருக்கிறது கொரோனா நோய்த் தொற்று.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று அதிகமானது. அம்மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டு நாடே முடங்கியது. இந்த நடவடிக்கையால் கொரோனா பரவல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, புதிய கொரோன நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தே வருகிறது.

2.28 சதவிகிதம்தான்… இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா இறப்பு விகிதம்!

புதிய நோயாளிகள் அதிகரித்தாலும் நோய்த் தாக்குதலால் இறப்பவர்களின் சதவிகிதம் குறைந்திருக்கிறது என ஆறுதல் அடையும் செய்தி கிடைத்திருக்கிறது.

அரசு உரிய கவனத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், கொரோனா நோய்த் தொற்றால் இறப்பவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குணமடைவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து, தற்போது 2.28 ஆக உள்ளது. உலகிலேயே இறப்பவர்களின் விகிதம் குறைந்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

2.28 சதவிகிதம்தான்… இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா இறப்பு விகிதம்!

ஜூலை 27 மதியம் வரையிலான நிலவரப்படி தொடர்ந்து 4-வது நாளாக, ஒரு நாளில் குணமடைவோரின் எண்ணிக்கை 30,000-க்கும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,991 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதன் விளைவாக இதுவரை இத்தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை (9,17,567) கடந்துள்ளது. குணமடையும் விகிதம் 64 விழுக்காடாக உள்ளது.

விரைவில் கொரோனா நோய்த் தொற்று இல்லாத நாளாக அமைய வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.