இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

 

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

நாடு முழுவதும் 16.15 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முக்கிய நாடாக இந்தியா மாறியிருக்கிறது. ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கவே மற்ற நாடுகள் திணறிக் கொண்டிருக்கையில், கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தும் திட்டத்தையும் தொடங்கிவிட்டது இந்தியா. தற்போது நாடு முழுவதிலும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 13,203 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் ஒரே நாளில் 131 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,53,470 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 1,06,67,736 ஆக உயர்ந்துள்ளதாகவும் 1,84,182 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 16,15,504 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.