குறைந்து வரும் கொரோனா; கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் இதுதான்!

குறைந்து வரும் கொரோனா; கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் இதுதான்!

ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

குறைந்து வரும் கொரோனா; கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் இதுதான்!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3,039 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25லட்சத்து 13ஆயிரத்து 098ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 69 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 322ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 322ஆக அதிகரித்துள்ளது.

குறைந்து வரும் கொரோனா; கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லா மாவட்டங்கள் இதுதான்!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முதன் முறையாக இரண்டு மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டமாக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக 2,298 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கடந்த 25 ஆம் தேதி நிலவரத்தின் படி கணக்கிடப்பட்டது. அதிகபட்சமாக கோவையில் 401 , சென்னையில் 244 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தர்மபுரியில் 3 , நாகப்பட்டினத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முற்றிலுமாக இல்லாத மாவட்டங்களாக தமிழக அரசின் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.