“கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்கவும்” – திருமாவளவன் கோரிக்கை!

 

“கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்கவும்” –  திருமாவளவன் கோரிக்கை!

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் தமிழக அரசியல் வரலாற்றில் காலூன்றி நின்ற மாபெரும் தலைவராக போற்றப்பட்டவர்.

“கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்கவும்” –  திருமாவளவன் கோரிக்கை!

அண்ணா வழியில் வந்த கலைஞர் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்தார். அண்ணா மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற அவர் தனது கடைசி காலம் வரை சமூக நீதி என்ற கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்றார். இதற்காக கலைஞர் கருணாநிதி பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தேசிய அரசியலில் கலைஞர் கருணாநிதிக்கு என தனி மரியாதை இருந்தாலும், அவர் என்றுமே தேசிய அரசுகளின் இடம்பிடிக்க ஆசைப்பட்டதில்லை; எனது உயரம் எனக்கு தெரியும் என்ற ஒற்றை பதிலே பலரின் கேள்விகளுக்கு பதிலாக அமைந்தது. தொடர்ந்து மதவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த கருணாநிதி தமிழ் சமூகத்திற்காக ஆற்றிய பணிகள் அளப்பரியது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், “#சூன்3_மாநிலஉரிமைநாள்: பெரியார்,அண்ணா பாசறையில் வளர்ந்தவர். மைய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய ஆணையம் நியமித்தவர். மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர். கூட்டாட்சி கோட்பாட்டுக்கு உயிர்ப்பை அளித்தவர். தமிழக அரசே, #கலைஞர்பிறந்தநாளைமாநிலஉரிமை_நாளாக அறிவிக்கவும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.