தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு!

 

தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து, கோயில்கள் திறப்பு, படப்பிடிப்புகளுக்கு அனுமதி என தாராள தளர்வுகளால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் இந்த காலகட்டத்தில் நிச்சயம் கொரோனா தொற்று வேகமெடுக்க வாய்ப்புள்ளது.

தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு!

இந்நிலையில் இன்று மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பல்வேறு மாவட்டங்களில் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. 40% மக்கள் மாஸ் அணிவது இல்லை, மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். முக கவசம் அணிந்து , தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் தொற்று பரவல் அதிகரித்துவிடும். ஞாயிறு தோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காசிமேடு துறைமுகத்தில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. முக கவசம் அணிவது இல்லை” என அவர் கவலை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு!

தொடர்ந்து பேசிய முதல்வர், சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூடுவதை காவல்துறையினர் தடுக்கவேண்டும் என்றும் டெங்குவை தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் நடத்தப்படும் என்று கூறிய முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு உயிரும் முக்கியம்; மக்களை காப்பது அரசின் கடமை; மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியாது என்றார்.