“பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு” : அமைச்சர் செங்கோட்டையன்

“பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து  முடிவு” : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

“பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து  முடிவு” : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மாணவர்களின் நலனில் அரசுக்கு அக்கறை இல்லையா என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்கிறது. அதன்படி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9ஆம் தேதி 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்துக்கேட்பு நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் கருத்துகளை கூறலாம். என்றும் கூறியுள்ளது.

“பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து  முடிவு” : அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். பள்ளி திறப்பு குறித்த பெற்றோர்களின் கருத்துகள் முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும். மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியிருப்பதன் மூலம் ஏழை மாணவர்களின் கனவு நனவாகியுள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.

பெற்றோர்கள் பள்ளி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அரசின் இந்த முடிவு தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.