சபரிமலையில் 10,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு

 

சபரிமலையில் 10,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் கடந்த மே மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் 10,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு

தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைத்தார். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் தினசரி 5000 பேர் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சபரிமலையில் இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. sabarimalaonline.org.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொண்டு சபரிமலை கோயிலுக்கு வரலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத பிறப்பையொட்டி வரும் 21 ஆம் தேதி வரை ஜோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் அல்லது கோயிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, ஆா்.டி.பி.சி.ஆா். கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்து கொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.