Home ஆன்மிகம் கடன் பிரச்னைகளை தீர்க்கும் மிளகு பரிகாரம்!

கடன் பிரச்னைகளை தீர்க்கும் மிளகு பரிகாரம்!

ஒரு மனிதனுக்கு வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனை மன உளைச்சல் எதனால் வரும் என்று பார்த்தோமேயானால் அதற்குப் பின்னணியில் இருப்பது கடன். கடன் பிரச்சனை என்பது நமது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் தெம்பு இல்லாமல் செய்து விடுகிறது. ஒருவித பயம் பதட்டம் நமக்குள் தொற்றி விடுகிறது. ஒருகட்டத்தில் வாழ்க்கை விரக்தி நிலைக்கு சென்று சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு துன்பப்படுகிறார்கள். இந்த சூழலில் கடன் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் சக்தி பைரவருக்கு உண்டு.இதனால் கடன் பிரச்சினையைத் தீர்க்கும் பைரவர் பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

கடன் பிரச்னைகளை தீர்க்கும் மிளகு பரிகாரம்!
கடன் பிரச்னைகளை தீர்க்கும் மிளகு பரிகாரம்!

செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு சுத்தமான வெள்ளை நிற துணியில் 27 மிளகுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய மூட்டை போல கட்டி உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின்னர் பைரவரை நினைத்து அவர்கள் மந்திரங்களை சொல்லியவாறு பிரார்த்தனை செய்து வாருங்கள். அதேபோல் மாலையில் பைரவர் சன்னதிக்குச் சென்று அங்குள்ள பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வாருங்கள். பைரவர்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் காலபைரவர் என்று சொல்வதுண்டு. கோடி கோடியாக எவ்வளவு கடன் இருந்தாலும் கால பைரவரை வணங்கி வரும் நிலையில் அந்தக் கடன்கள் அனைத்தையும் பைரவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

கடன் பிரச்னைகளை தீர்க்கும் மிளகு பரிகாரம்!

ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும். நமது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றும் சக்தியும் , ஆற்றலும் பைரவ பகவானுக்கு உள்ளது. அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு முடித்து வைத்து நன்கு நனைத்து தீபமேற்றி பைரவர் அஷ்டகம் வாசித்தால் போதுமானது. ஒன்பது வாரங்களில் உங்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி உங்கள் கடன் பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.

கடன் பிரச்னைகளை தீர்க்கும் மிளகு பரிகாரம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நானும் என் மகனும் இன்று சண்டை போடுவோம் நாளை கட்டிப்பிடிச்சுப்போம்- எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகரின் நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்,...

டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்- எம்.பி அதிரடி

மத்திய அரசு தனக்கு டெல்லியில் ஒதுக்கிய வீட்டை தமிழக மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
TopTamilNews