ஸ்டாலின் – ஈபிஎஸ் இடையே காரசார விவாதம் – அதிமுக வெளிநடப்பு!

 

ஸ்டாலின் – ஈபிஎஸ் இடையே காரசார விவாதம் – அதிமுக வெளிநடப்பு!

நீட் விலக்கு மசோதா தாக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வெளிநடப்பு செய்தனர்.

ஸ்டாலின் – ஈபிஎஸ் இடையே காரசார விவாதம் – அதிமுக வெளிநடப்பு!

இந்நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “வாணியம்பாடியில் மஜக நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு அடக்கும்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “ஜெயலலிதா இருக்கும் போது கூட வ நீட்தேர்வு வரவில்லை. நீட் தேர்வு தொடர்பாக இன்று பேரவையில் மசோதா கொண்டு வருகிறோம்; சட்டத்தை எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும் ” என்று கோரிக்கை வைத்தார்.

ஸ்டாலின் – ஈபிஎஸ் இடையே காரசார விவாதம் – அதிமுக வெளிநடப்பு!

இருப்பினும் நீட் தேர்வு பயத்தால் நேற்று மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டதை குறிப்பிட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது என்று எடப்பாடி பழனிச்சாமி விவாதம் செய்தார். அத்துடன் கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.இதை தொடர்ந்து நீட் விலக்கு மசோதா தாக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்ற அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.