“கொரானாவால் சிறைக்கூடம் போல் மாறிய பள்ளிக்கூடம்” அமெரிக்காவில் பள்ளிகள் திறந்ததால் பலி எண்ணிக்கை உயர்வு ..

“கொரானாவால் சிறைக்கூடம் போல் மாறிய பள்ளிக்கூடம்” அமெரிக்காவில் பள்ளிகள்  திறந்ததால் பலி எண்ணிக்கை உயர்வு ..

அமெரிக்காவில் கொரானா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் அங்கு பல மாநிலங்களில் ட்ரம்பின் உத்தரவுப்படி பள்ளிகளை திறந்தார்கள் .பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரானா பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள் .அவர்களுக்கு விளையாட கூட அனுமதிக்காமல் வகுப்பறைக்குளேயே இடைவெளிவிட்டு உட்கார வைத்து வகுப்பெடுத்தார்கள் .லன்ச் சாப்பிட கூட யாரையும் வெளியே அனுமதிக்காமல் சிறைக்கூடம் போல் பள்ளிக்கூடத்தை நடத்தினார்கள்

“கொரானாவால் சிறைக்கூடம் போல் மாறிய பள்ளிக்கூடம்” அமெரிக்காவில் பள்ளிகள்  திறந்ததால் பலி எண்ணிக்கை உயர்வு ..

ஆனால் இதையும் மீறி அங்கு மிசிசிப்பியில் 116க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு கொரானா பரவியது .அதுமட்டுமல்ல ஒரு கால்பந்து ஆசிரியரும் .இன்னொரு உதவி ஆசிரியரும் கொரானாவுக்கு பலியானார்கள் .
வடகரோலினா ,ஜார்ஜியா ,இண்டியானா ,டென்னஸி போன்ற மாகாணங்களிலும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் அங்கும் இதே நிலைதான் .பல நூறு மாணவர்களுக்கு பரவிய வைரஸால் பல மாணவர்கள் தனிமைப்படுத்தளுக்கு உள்ளானார்கள் .
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் மாணவர்களுக்கு கொரானாவை எதிர்க்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு திறனிருக்கிறது என்று பதிவிட்ட்டார் .பிறகு அந்த பதிவு நீக்கப்பட்டது .
இப்போது அங்கு பள்ளிகளை திறந்தவர்கள் பலி எண்ணிக்கை உயரவதாலும் ,பல மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுவதாலும் பள்ளிகளை மீண்டும் மூடி விடலாமா என்று யோசிக்கிறார்கள் .

“கொரானாவால் சிறைக்கூடம் போல் மாறிய பள்ளிக்கூடம்” அமெரிக்காவில் பள்ளிகள்  திறந்ததால் பலி எண்ணிக்கை உயர்வு ..