பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு

 

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வந்தது . இங்கு நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்த வந்த தொழிலாளர்கள் பலியாகினர். அத்துடன் 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணமாக ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல் முதல்வர் பழனிசாமி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்தை நிவாரணமாக அறிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு

இந்நிலையில் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 தனிப்படையினர் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.