பாகிஸ்தான் அடுக்கு மாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

கராச்சி: பாகிஸ்தானில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

கராச்சியின் லியாரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. 6 மாடிகள் கொண்ட அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததும், மின் தடை ஏற்பட்டதால் மீட்பு நடவடிக்கைகள் கடினமாகியது.

இதுவரை நான்கு பெண்கள் உட்பட 13 பேரின் சடலங்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர். 24 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் இறந்தார். இராணுவம், ரேஞ்சர்ஸ், போலீஸ் போன்ற பணியாளர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லியாரியின் லியாகத் காலனியில் அமைந்திருந்த இந்த கட்டிடத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மேல் மாடியில் ஒரு பென்ட்ஹவுஸ் ஆகியவை இருந்தன. இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!