சென்று வாருங்கள் எஸ்.பி.பி ! – தவிக்கும் தமிழ் காற்று !

 

சென்று வாருங்கள் எஸ்.பி.பி ! – தவிக்கும் தமிழ் காற்று !

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சுருக்கமாக எஸ்.பி.பி. 80 களில் புதிய தலைமுறை இயக்குநர்களின் வருகைக்கு ஏற்ப , திரை இசை வடிவங்களும் மாற்றம் பெறத் தொடங்கின. அந்த மாற்றத்தின் தேவைக்கு ஏற்ப தன் குரலை பொருத்திக் கொண்டவர் பாடும் நிலா பாலு என கொண்டாடப்படும் எஸ்.பி.பி.

சென்று வாருங்கள் எஸ்.பி.பி ! – தவிக்கும் தமிழ் காற்று !

கிராமப்புற துள்ளல் இசையா, காதல் ரசம் சொட்டும் டூயட் பாடல்களா,பிரிவின் வலி நிறைந்த சோகப்பாடல்களா? எல்லாவற்றுக்கு பொருத்தமானது எஸ்.பி.பியின் குரல். ஒரு கட்டத்தில் கோடம்பாக்கத்தின் இசைக் குரலாக இருந்தார்.

55 ஆண்டுகள் திரை இசையில் கோலோச்சியவர் எஸ்.பி.பி. சுமார் 42 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகளில் பாடும் வாய்ப்பு இது வரை யாருக்கும் அமையவில்லை. அவரது பாடல்களுக்காக 6 முறை தேசிய விருது பெற்றவர். அப்படியான புகழும், பெருமையும் கொண்ட தன்னிகரில்லா குரல் கொண்ட எஸ்பிபி தற்போது நம்மிடம் இல்லை என்பதே நம்ப முடியாமல் இருக்கிறது.

சென்று வாருங்கள் எஸ்.பி.பி ! – தவிக்கும் தமிழ் காற்று !

அவருக்கு கொரோனா தொற்று என்பதை அறிந்த கணமே, இசை உலகமும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், குணம் பெற்று திரும்ப வேண்டும் என கண்ணீருடன் பிரார்த்தனை செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக எஸ்.பி.பியோடு மன வருத்தத்தில் இருந்த அவரது நெருக்கமான நண்பரான இசைஞானி இளையராஜா, கண்ணீர் மல்க வெளியிட்ட வெளியிட்ட உருக்கமாக வீடியோ, அனைவரது கண்களையும் குளமாக்கியது. அதே நட்பு வட்டத்தைச் சேர்ந்த இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட வீடியோவும் மிக உருக்கமாக இருந்தது. தமிழ் சினிமா உலகம் மட்டுமல்ல, மல்லுவுட், பாலிவுட் என திரை உலகமே அவர் மீண்டு வர வேண்டும் என உருக்கமான பிரார்த்தனைகளை செய்தது.

மருத்துவ சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், விரைவில் வீட்டுக்குச் செல்ல உள்ளதாகவும் எஸ்.பி.பி சரண் கூறியிருந்தார். சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர் பாடிய பாடல்களை சிகிச்சை பெற்று வந்த அறையில் மருத்துவர்கள் ஒலிக்க செய்தனர். இந்த நிலையில், எதிர்பாராத நிகழ்வாக நுரையீரல் பாதிப்பு மீண்டும் மோசமடைந்ததாகவும், அதனால் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சென்று வாருங்கள் எஸ்.பி.பி ! – தவிக்கும் தமிழ் காற்று !

இந்த நிலையில்தான், இன்று மதியம் மருத்துவமனை நிர்வாகம் முறைப்படி அவரது இறப்பினை அறிவித்தது. எஸ்.பி.பி மீண்டு வந்து, மீண்டும் இசை பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த நிலையில், அவரது இழப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை கண்ணீர் மழையில் நனைத்துள்ளது. அவர் குரல் தமிழ் காற்றின் அடையாளம் என்றால் மிகையில்லை. சென்று வாருங்கள் எஸ்.பி.பி

நீரை மகேந்திரன்