ஞானபீட விருது பெற்ற மலையாள கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மரணம்

 

ஞானபீட விருது பெற்ற மலையாள கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மரணம்

மலையாள இலக்கியத்தின் மிக முக்கிய கவிஞராக அறியப்பட்டவர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல துறைகளில் தீவிரமாக இயங்கியவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். பத்திரிகை துறையில் இளவயதில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.

ஞானபீட விருது பெற்ற மலையாள கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மரணம்

இருபதாம் நுற்றாண்டின்றெ இதிகாசம், பலிதர்சனம். இடிஞ்ஞு பொளிஞ்ஞ லோகம்.. உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர். ’ஸ்ரீமத் பாகவதம்’ எனும் மொழிபெயர்பெயர்ப்பு இவரின் பணிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

48 ஆண்டுகளுக்கு முன்பே கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றவர். அதைத் தொடர்ந்து மத்திய அரசின் சாகித்ய அகாடமி, அசன் விருது, வயலார் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைத் தனது இலக்கியப் பங்களிப்புகாகப் பெற்றவர். இவற்றிற்கு சிகரம் வைத்தார் போல் சென்ற ஆண்டில் அவருக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 93. மிக மிகத் தாமதமாக இவ்விருது அளிக்கப்பட்டதாக எழுத்தாளர்கள் வருத்தப்பட்டார்கள்.

ஞானபீட விருது பெற்ற மலையாள கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மரணம்

தற்போது 94 வயதான அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். எழுத்தாளர்கள், திரை கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரிக்கு அஞ்சலி தெரிவித்துவருகின்றனர்.