தந்தை மகன் ஜெயலில் மரணம்… பாரபட்சமின்றி நடவடிக்கை! – அமைச்சர் உறுதி

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சிறையில் மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மர்ம மரணத்தைக் கண்டித்து சாத்தான்குளத்தில் வணிகர்கள், பொது மக்கள் போராட்டத்தில் குதித்தனர். முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயிலில் இறந்த சம்பவத்தில் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!