வீட்டு வாடகை பிரச்னையில் தாக்கிய காவல் ஆய்வாளர் : அவமானத்தால் தீக்குளித்த நபர் பரிதாப பலி!

 

வீட்டு வாடகை பிரச்னையில் தாக்கிய காவல் ஆய்வாளர் : அவமானத்தால் தீக்குளித்த நபர் பரிதாப பலி!

திருவள்ளூர் மாவட்டம் குழல் அடுத்த விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர் கடந்த ஆறு மாத காலமாக வாடகைக்கு வசித்து வந்துள்ளார் பெயிண்டர் வேலை செய்யும் சீனிவாசன் ஊரடங்கு காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து வாடகை கொடுக்காமல் இருந்த சீனிவாசனை வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது இருப்பினும் இதற்கு சீனிவாசன் மறுப்பு தெரிவித்ததால் ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் கடந்த 29ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

வீட்டு வாடகை பிரச்னையில் தாக்கிய காவல் ஆய்வாளர் : அவமானத்தால் தீக்குளித்த நபர் பரிதாப பலி!

புகாரின் அடிப்படையில் புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் நேற்று சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது பென் சாம் சீனிவாசனின் மனைவி மற்றும் மகள் முன்னால் அவரை தாக்கியுள்ளார். இதையடுத்து அவமானத்தை தாங்கமுடியாத சீனிவாசன் நேற்று மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சீனிவாசனை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வீட்டு வாடகை பிரச்னையில் தாக்கிய காவல் ஆய்வாளர் : அவமானத்தால் தீக்குளித்த நபர் பரிதாப பலி!

85 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வரும் சீனிவாசன் தன்னை காவல் ஆய்வாளர் பென் சாம் தாக்கி அவமானப்படுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டு வாடகை பிரச்னையில் தீக்குளித்த சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னதாக இந்த சம்பவத்தில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் அடிப்படையில் சென்னை புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.