கடன் தொல்லையால் விஷம் குடித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

 

கடன் தொல்லையால் விஷம் குடித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே கடன்தொல்லை காரணமாக விஷம் குடித்த மாற்றுத் திறனாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த தவளாய்புரம் மத்திமான் விளை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். மாற்றுத் திறனாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், குடும்ப செலவிற்காக பலரிடமும் கடன் பெற்றுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி அளிக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் விஷம் குடித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

இதனால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த மகேந்திரன் கடந்த 18ஆம் தேதி அன்று வீட்டில் இருந்த பூச்சிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.