“விஜய் சேதுபதி உங்களுக்கு நிகழ்ந்தது காட்டுமிராண்டித்தனமானது” : நடிகை குஷ்பு ஆவேசம்!

 

“விஜய் சேதுபதி உங்களுக்கு நிகழ்ந்தது காட்டுமிராண்டித்தனமானது” : நடிகை குஷ்பு ஆவேசம்!

விஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்தது காட்டுமிராண்டித்தனமானது என்று பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

“விஜய் சேதுபதி உங்களுக்கு நிகழ்ந்தது காட்டுமிராண்டித்தனமானது” : நடிகை குஷ்பு ஆவேசம்!

‘800’ பட விவகாரத்தால் நடிகர் விஜய் சேதுபதியின் பெயர் தான் சமூகவலைதளங்ளில் பேசும் பொருளாகியுள்ளது. குறிப்பாக அவரது மகளுக்கு ட்விட்டரில் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்தது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எம்.பி. கனிமொழி, பாடகி சின்மயி, இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில் இதுகுறித்து பாஜக பிரமுகர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள விஜய் சேதுபதி நீங்கள் ஒரு வலிமையான நபர். நீங்கள் இருப்பது போலவே இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வந்துள்ள அச்சுறுத்தல் காட்டுமிராண்டித்தனமானது, இது விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளியைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்கள் செய்ததைச் செய்ய ஒரு பெரிய மனசு தேவை. நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.