’ரஜினி அவர்களே… இடஒதுக்கீடு பற்றி உங்களுக்கு கருத்தே இல்லையா?’ ஜோதிமணி கேள்வி

 

’ரஜினி அவர்களே… இடஒதுக்கீடு பற்றி உங்களுக்கு கருத்தே இல்லையா?’ ஜோதிமணி கேள்வி

நடிகர் ரஜினிக்கு டிவிட்டரி கேள்வி எழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் கட்சி ஜோதிமணி.

கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் முருகர் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. கந்தர் சஷ்டி கவசம் பாடல்களை ஆபாசமாகச் சித்திரித்தாகவும் அதனால் முருகப் பக்தர்களின் மனம் புண்ப்பட்டதாகவும் பாரதிய ஜனதா கட்சி காவல் துறையில் புகார் அளித்தது. அதையொட்டி கருப்பர் கூட்டம் சேனல் தொடர்புள்ள இருவர் கைது செய்யப்பட்டன. அவர்களின் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இன்னும் ஒருவர் முன் ஜாமின் கோரி விண்ணப்பித்திருக்கிறார். கருப்பர் கூட்டம் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களையும் காவல் துறையால் அழிக்கப்பட்டன.

’ரஜினி அவர்களே… இடஒதுக்கீடு பற்றி உங்களுக்கு கருத்தே இல்லையா?’ ஜோதிமணி கேள்வி

கருப்பர் கூட்டம் சேனல் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் நேற்று ட்விட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

அதில், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளைக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்ஒழியணும். என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்பதிவில் அவர் பயன்படுத்திய ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியது.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் பார்ராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ரஜினிகாந்தை நோக்கி கடுமையான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிந்திருக்கிறார்.

’ரஜினி அவர்களே… இடஒதுக்கீடு பற்றி உங்களுக்கு கருத்தே இல்லையா?’ ஜோதிமணி கேள்வி

ரஜினிகாந்த் அவர்களே தமிழகத்தில் பிற்படுத்தப்ப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 70%  இந்திய அளவில் 52%. அவர்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது பிஜேபி அரசு. அவ்வப்போது கருத்துச் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இது பற்றி கருத்தே இல்லையா?அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா?

’ரஜினி அவர்களே… இடஒதுக்கீடு பற்றி உங்களுக்கு கருத்தே இல்லையா?’ ஜோதிமணி கேள்வி

இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பகிரப்படுகிறது.