“தோனியை இந்திய அணி மிஸ் செய்யும்; சென்னை மீதான உங்களது காதல் தொடர்வது மகிழ்ச்சி” : கமல் ஹாசன் பாராட்டு!

 

“தோனியை இந்திய அணி மிஸ் செய்யும்; சென்னை மீதான உங்களது காதல் தொடர்வது மகிழ்ச்சி” : கமல் ஹாசன் பாராட்டு!

இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று மாலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து சக வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக பதிவிட்டார்.

“தோனியை இந்திய அணி மிஸ் செய்யும்; சென்னை மீதான உங்களது காதல் தொடர்வது மகிழ்ச்சி” : கமல் ஹாசன் பாராட்டு!

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து தோனி குறித்து சச்சின், விராட் கோலி என கிரிக்கெட் வீரர்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.


இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “விளையாட்டிலும், வாழ்க்கையிலும் உயர தன்னம்பிக்கை முக்கியம் என்பதை உணர்த்தியதற்கு நன்றி தோனி. சிறிய ஊரில் இருந்து வந்து நாட்டின் ஹீரோவாக உயர்ந்த தோனியை இந்திய அணி மிஸ் செய்யும். சென்னை மீதான உங்களது காதல் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.