மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனைகளில் காணாமல் போகும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் சடலங்கள்..

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனைகளில் காணாமல் போகும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் சடலங்கள்..

நம் நாட்டில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பையில் தொற்று நோயின் கோரத்தாண்டவம் அதிபயங்கரமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனைகளில் காணாமல் போகும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் சடலங்கள்..

இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸால் இறந்த நோயாளிகளின் சடலங்கள் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாகமாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் ஆகியோருக்கு பா.ஜ.க. தலைவர் கிரிட் சோமையா கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனைகளில் காணாமல் போகும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் சடலங்கள்..

அந்த கடிதத்தில், பல்வேறு அரசு மருத்துவமனைகளிலிருந்து மொத்தம் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் 6 சடலங்களை காணவில்லை என கிரட் சோமையா குறிப்பிட்டு இருந்தார். கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி சூழலில் தொற்று நோயால் இறந்தவர்களின் சடலங்கள் காணாமல் போய் இருப்பது அம்மாநில அரசுக்கு பெரும் கவலை மற்றும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.